தளி - Thalli

கிருஷ்ணகிரியில் போலி டாக்டருக்கு காப்பு

கிருஷ்ணகிரியில் போலி டாக்டருக்கு காப்பு

கிருஷ்ணகிரி பழையபேட்டை அருந்ததி மாரியம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (42). இவர் இதே பகுதியில் கிளினிக் வைத்து அலோபதி சிகிச்சை அளித்து வரும் நிலையில் இவர் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளிப்பதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதை அடுத்து தேசிய ஊரக சுகாதார திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சண்முக வேல் தலைமையிலான அலுவலர்கள் நேற்று முன்தினம்(நவம்பர் 15) கிளினிக்கில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாகராஜ் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.  இதுகுறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் நாகராஜனை கைது செய்தனர். மேலும் கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி