தமிழகம் பகுதிகளில், இன்று முதல் நவம்பர் 1-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளில் நான்கு நாட்கள் கழித்து வானம் மேகமூட்டத்துடன் காணபட்ட நிலையில் இன்று மாலை 4 மணி முதல் அரசம்பட்டி, புட்டன்கடை, புலியூர், பாரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.