கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அடுத்த கரிக்கல் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்(27) லாரி டிரைவர். இவருடைய மனைவி பூர்ணிமா(20) இவர்கள் கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகர் பகுதியில் மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 13-ஆம் தேதி அன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற பூர்ணிமா, மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் இல்லாததால் இதுகுறித்து அருள் கிருஷ்ணகிரி போலீசில் புகார் கொடுத்தார். அதில் பூர்ணிமா அடிக்கடி ஒரு நபரிடம் செல்போனில் பேசி வந்தார். இதனால், அந்த நபர் தனது மனைவியை கடத்திச் சென்றிருக்கலாம் எனவே அவரிடம் இருந்து தன் மனைவியை மீட்டுத் தரவேண்டும் என தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.