‘கிளிக் லேப்ஸ்’ சர்வதேச ஆய்வுக்கூட ஆய்வாளர்கள், குரலை வைத்தே டைப் 2 நீரிழிவைக் கண்டுபிடிக்கும் யுத்தியை கண்டுபிடித்துள்ளனர். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு குரலில் பாதிப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. நீரிழிவு உள்ள 192 பேரையும், நோயில்லாத 75 பேரையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். AI முறையில் குரல் பதிவு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 85% சரியான முடிவுகள் வெளிப்பட்டது. இந்த கண்டுபிடிப்பை ஆய்வாளர்கள் மேம்படுத்தி வருகின்றனர்.