தேன்கனிக்கோட்டை: காட்டு யானைகளை டிரோன் மூலம் கண்காணிப்பு.

66பார்த்தது
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 50 யானைகள் கடந்த சில தினங்களாக கிருஷ்ணகிரி மாவட்டம் தளி மற்றும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வந்துள்ளன. அந்த யானைகள் நொகனூர் வனப்பகுதி, அல ஹள்ளி, தாவரகரை ஆகிய வனப்பகுதியில் மூன்று பிரிவுகளாக பிரிந்து முகாமிட்டுள்ளன.

இதற்கிடையே தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் விஜயன் தலைமையில் 40 பேர் கொண்ட குழுவினர் முகாமிட்டுள்ள யானைகளை டிரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் விவசாய நிலங்கள், தோட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் யானைகள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்க கேட்டுக்கொண்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி