பர்கூர் - Bargur

போச்சம்பள்ளி: திப்பனூர் ஏரியில் விடப்பட்ட மீன் குஞ்சுகள்

போச்சம்பள்ளி: திப்பனூர் ஏரியில் விடப்பட்ட மீன் குஞ்சுகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பர்கூர் தொகுதிக்கு உட்பட்ட 14 ஏரிகளில் 3 லட்சத்து 82 ஆயிரம் மீன்கள் விடப்பட்டது. போச்சம்பள்ளி அருகே உள்ள புளியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட திப்பனூர் மற்றும் கெங்கிநாயக்கன்பட்டி ஏரிகளில் நேற்று(அக்.17) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் எஸ். ரங்கநாதன் ஆகியோர் மீன்குஞ்சுகளை விட்டனர். இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி
கண்ணியம் குறித்து பாடமெடுக்க தேவையில்லை!
Oct 18, 2024, 16:10 IST/

கண்ணியம் குறித்து பாடமெடுக்க தேவையில்லை!

Oct 18, 2024, 16:10 IST
யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பது திராவிடம். மற்றோரைப் புண்படுத்தி மகிழ்வது ஆரியம். இதற்கு மேலும் ஓர் உதாரணமே தமிழ்தாய் வாழ்த்தில் திராவிடம் தவிர்க்கப்பட்டது. சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது. வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது. இதைப் புரிந்து கொள்ளாத ஆரியநர், அண்ணா வழியில் நடைபோடும் நம் தலைவர் அவர்களுக்கு, ‘கண்ணியம்’ குறித்துப் பாடமெடுக்கத் தேவையில்லை. ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் அவரை, ஒன்றிய அரசு உடனேத் திரும்பப்பெற வேண்டும் என துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.