கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் அடுத்த பூசாரி கொட்டாயை சேர்ந்தவர் பன்னீர் (58) இவர் நாகம்பட்டி ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் இந்த நிலையில் சொந்த வேலை காரணமாக டூவீலரில் நேற்று முன்தினம் கொடமாண்டப்பட்டி பகுதிக்கு சென்றார்.
பின்னர் விட்டு மீண்டும் ஊருக்கு வந்த போது எம். ஜி. ஆர். நகர் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த டிப்பர் லாரி டூவீலர் மீது மோதியது. இதில் பன்னீர் தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த மத்தூர் போலீசார் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் வேல்முருகன் (41) என்பவரைகைது செய்தனர். லாரி மோதி இறந்த ஊராட்சி செயலாளர் பன்னீருக்கு மனைவிகளும், 2 மகன்களும் உள்ளனர்.