கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அருகே மத்தூர் அடுத்துள்ள சோழபுரத்தை சேர்ந்தவர் துரை (33) தையல் தொழிலாளியான. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சைனை வந்துள்ளது. இதனால் அவரது மனைவி திருப்பூருக்கு சென்று விட்டார். இதனால் துரை தனியாக சோழபுரத்தில் வசித்து வந்தார்.
மனைவி உடன் இல்லததால் மனமுடைந்த துரை நேற்று முன்தினம் விஷம் குடித்து விட்டு மயங்கிய நிலையில் இருந்தத அவரை உறவினர்கள் மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மெற்கொண்டு வருகின்றனர்.