டூ வீலரை வேகமாக இயக்கியதால் வாலிபர் கீழே விழுந்து விபத்து.

85பார்த்தது
குருணை குளத்துப்பட்டியில் டூ வீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து. வாலிபர் படுகாயம்.

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, குருணை குளத்துப்பட்டி அருகே அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன் வயது 45.

இவர் மார்ச் 17ஆம் தேதி மதியம் 3: 20 மணியளவில், குருணை குளத்துப்பட்டி கிராம சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.


இவரது வாகனம் குருணை குளத்துப்பட்டி பகுதியில் செயல்படும் ஒரு தனியார் ஹோட்டல் அருகே சென்றபோது, டூவீலரை வேகமாக இயக்கியதால் எதிர்பாராத விதமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.


இந்த விபத்தில் முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த முருகனின் சகோதரர் வெள்ளைச்சாமி வயது 55 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய முருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சிந்தாமணிப்பட்டி காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி