மாரியம்மன் கோவில் திருவிழா பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்

77பார்த்தது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மலையாண்டிப்பட்டியில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு குளித்தலை காவிரி கடம்பன் நதிக்கரையிலிருந்து 500க்கு மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம் எடுத்துக்கொண்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர். இதில் குளித்தலை, அய்யர்மலை வழியாக மலையாண்டிபட்டியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர். அதன் பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி