கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்டத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சுகன்யா என்பவர் காயப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, லாலாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இன்று காலை புகாரை விசாரிக்க வந்த லாலாபேட்டை எஸ்எஸ்ஐ செந்தில் நாதன் புகார் அளித்த நபர்களிடம் விசாரித்து சுகன்யாவின் தம்பி மணிகண்டனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.