கரூர்: அனுமதியின்றி வாரி மண் கடத்தல்; மாட்டு வண்டி பறிமுதல்

77பார்த்தது
கரூர்: அனுமதியின்றி வாரி மண் கடத்தல்; மாட்டு வண்டி பறிமுதல்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே வேங்காம்பட்டி புங்காற்று வாரியில் கிராம நிர்வாக அலுவலர் பிரபு கடந்த 20ஆம் தேதி கிராம ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அரசு அனுமதி மற்றும் நடை சீட்டு இல்லாமல் கால் யூனிட் வாரிமண்ணுடன் நின்றிருந்த மாட்டு வண்டியை மட்டும் கைப்பற்றி லாலாபேட்டை காவல் நிலையத்தில் விஏஓ பிரபு புகார் அளித்தார். அதன்பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி