கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே வேலாங்காட்டுப்பட்டி மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 300 க்கு மேற்பட்ட பக்தர்கள் குளித்தலை காவேரி ஆற்றில் புனித நீராடி அங்கிருந்து பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக வேலாங்காட்டுப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். அதன் பின்னர் கோவிலை சுற்றி வந்த பக்தர்கள் கொண்டு வந்த காவிரி தீர்த்தம், பால் ஆகியவற்றை சுவாமி முன்பு வைத்தனர். பிறகு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் வேலாங்காட்டுப்பட்டி சுற்றியுள்ள பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்