கரூர் மாவட்டம், தாந்தோணி மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வது குறித்து பெண் காவல் உதவி ஆய்வாளர் தில்லைக்கரசிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மார்ச் 23ஆம் தேதி காலை 10 மணி அளவில் கொளந்தா கவுண்டனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் அம்மையப்பன் டீ ஸ்டாலில் சட்டவிரோத புகையிலை விற்பனை நடப்பதை தெரிந்துகொண்டார்.
கடையில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, விற்பனை செய்த கரூர் பசுபதிபாளையம், ஹவுசிங் போர்டை சேர்ந்த பெரியசாமி வயது 52 என்பவரை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.