மகிளிப்பட்டியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பழுதால் அச்சம்

68பார்த்தது
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிந்தலவாடி கிராம ஊராட்சி மகிளிப்பட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. மேல்நிலை நீர் தேக்க தொட்டி பழுதடைந்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி முழுவதுமாக பழுதடைந்து தண்ணீர் கசிந்து வருவதும் மற்றும் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து ஆங்காங்கே விழுந்து வருகிறது. அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்படுத்தி தான் தற்போது தண்ணீர் வசதி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலையில் அதன் அருகே 5 இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து அடிப்பகுதி பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. அதன் அருகே விளையாடிக் கொண்ட இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினர்.

மேலும் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகளும் அவ்வழியே செல்ல அச்சம்அடைந்து வருகின்றனர்.


உடனடியாக மாவட்ட நிர்வாகம் பழுதடைந்த நீர்த் தேக்க தொட்டியை இடித்து விட்டு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி