மாயனூர் அருகே டூவீலர் மீது லாரி மோதி சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, மாயனூர், காசா காலனி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி வயது 54.
இவர் மார்ச் 27 ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில், திருச்சி- கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்
அப்போது மாயனூர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது,
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம், ஆதனூர் பகுதியைச் சேர்ந்த ஜான் சுந்தர் என்பவர் வேகமாக ஓட்டி வந்த லாரி, முத்துசாமி ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த முத்துசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் அறிந்த முத்துசாமியின் மனைவி சரோஜா வயது 47 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், உயிரிழந்த முத்துசாமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக லாரியை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்தி ஜான் சுந்தர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மாயனூர் காவல்துறையினர்.