ரூ. 22 லட்சம் நூலகத்தில் கூடுதல் கட்டிடம் பணிக்கு பூமி பூஜை.

57பார்த்தது
உப்பிடமங்கலத்தில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் நூலகத்தில் கூடுதல் கட்டிடம் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார் எம்எல்ஏ சிவகாமி சுந்தரி.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாந்தோணி கிழக்கு ஒன்றியம், உப்பிடமங்கலம் பேரூராட்சியில், பள்ளிக்கல்வி மற்றும் பொது நூலக கட்டிடம் அமைத்தல் பணித்திட்டத்தின் கீழ் ரூபாய் 22 லட்சம் மதிப்பீட்டில் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தின் முதல் தளத்தில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை இன்று எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் திமுக தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுபதி, உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பூமி பூஜை முடித்த பிறகு இத்திட்டத்துக்கான பணிகளை துவக்கி வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி