
கரூர்: சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 14ஆம் ஆண்டு பாதயாத்திரை
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே சிவாயம் ஊராட்சி ஆதனூரில் சமயபுரம் பாதையாத்திரை குழு மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பாக 14வது ஆண்டு பாதையாத்திரை விழா இன்று நடைபெற்றது. மின் அலங்காரம் செய்யப்பட்ட வண்டியில் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் ரதத்துடன் கோவிலிலிருந்து பாதையாத்திரை குழு புறப்பட்டது. இந்த பாதையாத்திரை நிகழ்ச்சியில் சிவாயம் ஆதனூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.