ரூ. 1, கோடியே 83 லட்சம் மதிப்பில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று வளர்ச்சி திட்ட பணிகளை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி துவக்கி வைத்தார்.
இதில் தாந்தோனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட
கே. பிச்சம்பட்டி பகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி 2023- 24 மற்றும் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி நிதி, நபார்டு நிதி உள்ளிட்ட நிதிகள் ரூபாய் ஒரு கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் புதிய நாடக மேடை, புதிய சமுதாயக்கூடம், தார் சாலை அமைத்தல் போன்ற நிறைவடைந்த பணிகளை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி இன்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுபதி, தாந்தோணி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிவகாமி வேலுச்சாமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்தனர்.