கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் இரவில் பணிமுடிந்து தங்கும் விடுதிக்கு திரும்பி கொண்டிருந்த இரண்டு இளம்பெண்களை அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் பின் தொடர்ந்து சென்று தொந்தரவு கொடுத்ததால் இருவரும் விடுதிக்குள் பதட்டத்துடன் ஓடிய வீடியோ வெளியாகியுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் விடுதி நிர்வாகத்தினர் இளைஞரை பிடித்து அறையில் அடைத்த நிலையில் அங்கிருந்து அவர் தப்பி சென்றுள்ளார்.