கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேல ஆசாரிப்பள்ளம் பகுதியில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் முன் அமைந்துள்ள குருசடியை அங்கிருந்து இடமாற்றம் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. பங்குத்தந்தை தலைமையில் ஒரு தரப்பினர் இந்த செயலில் ஈடுபட்டதற்கு எதிர் தரப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.