சென்னை மாநகரப் பேருந்தில் பெண்களுக்கான இருக்கையில் அமர்ந்து வந்த இளைஞர்களை எழும்ப சொன்ன பெண்களுக்கு இளைஞர்கள் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, விருகம்பாக்கத்தில் தடம் எண் 26 மாநகரப் பேருந்தில் பெண்கள் இருக்கையில் அமர்ந்த இளைஞர்களை எழுந்திருக்கும்படி கூறியபோது, நீங்க ஓசியில் தானே வர்றீங்க நின்னுட்டே வாங்க தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், அதனை வீடியோ எடுத்த பெண்ணிடம் அவர்கள் வாக்குவாதம் செய்து மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.