விஜய்வசந்த் எம்.பி. கிள்ளியூரில் நன்றி அறிவிப்பு சுற்று பயணம்

57பார்த்தது
கன்னியாகுமரி  நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு 2-வது முறையாக வெற்றிபெற்ற  விஜய்வசந்த் எம். பி கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 2 ம் கட்டமாக இன்று (17-ம் தேதி)  திக்கணம் கோடு பகுதியில் இருந்து திறந்த வாகனத்தில் நன்றி தெரிவித்து சுற்றுபயணத்தை துவக்கினார்.

அப்போது கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமையில் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திக்கணங்கோடு துவக்கிய பயணம் கருங்கலில் உள்ள ராஜீவ்காந்தி சிலை, பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மத்திகோடு ஸ்கூல் ஜங்சன், சடையன்குழி, கருமாவிளை, மூசாரி, முள்ளங்கினாவிளை ஜங்சன், தொலையாவட்டம், விழுந்தயம்பலம், பரம்பு, ஒளிபாறை, பாலப்பள்ளம் மிடாலக்காடு, ஆலஞ்சி போன்ற பகுதிகளில் திறந்த வாகனத்தில் நன்றி அறிவிப்பு இரவு வரை நடைபெற்றது.

நிகழ்ச்சியில்  மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங்,   மார்க்சிஸ்ட் கட்சி சாந்தகுமார்,   மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜோர்தான்,   மாநில பொதுச் செயலாளர் ஆஸ்கர் பிரடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி