புதுக்கடை அருகே உள்ள இனயம் புனித ஹெலன் ஆலய பங்கு பணியாளர் பவியன்ஸ் என்பவர் தலைமையில் அதன் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் இடம் ஒரு மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது: -
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வருகின்ற அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி தக்கலையில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் மனவளக்குறிச்சியில் செயல்படும் இந்திய மணல் ஆலைக்காக எமது கடற்கரை கிராமங்களில் மணல் அகழாய்வு செய்ய மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்கான செய்தியை வெளியிட்டுள்ளது.
இதில் இனயம், இனயம் புத்தன் துறை ஊராட்சிக்கு உட்பட்ட கடற்கரை கிராமமும் உள்ளடங்கி உள்ளது. இந்த நடவடிக்கையால் மீனவ கிராமம் பாதிக்கப்படும். எனவே மணல் ஆலை அகழ்வாய்வு எமது கடற்கரை பகுதியில் வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். என மனுவில் கூறப்பட்டுள்ளது.