சர்வதேச காது கேளாதோர் தினம் பேரணி;   கலெக்டர் துவக்கினார்

60பார்த்தது
ஆண்டு தோறும் செப்டம்பர் 28 ம் தேதி காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய செய்கை மொழி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.   அந்த வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காது கேளாதோர் தின பேரணி தொடங்கியது.
       இதனை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கொடி அசைத்து துவங்கி வைத்தார். இதில் காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் ஏராளமான கலந்து கொண்டு கைகளில் பதாகைகளை ஏந்தி சென்றனர். மேலும்  காது கேளாதோர், சைகை மொழி எளிதாக கற்கலாம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியில் ஈடுபட்டனர்.  

     இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, டதி ஸ்கூல் சந்திப்பு வழியாக வேப்பமூடு பூங்கா முன்பு சென்று நிறைவடைந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட காதுகேளாதோர் வாய் பேச முடியாதோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி