குமரி மாவட்டம் முட்டம் பகுதியில் செயல்படும் கே. எம். எம். சி. , மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, கல்லூரி மாணவ மாணவிகள், செவிலியர்கள், மருத்துவர்கள் உட்பட ஏராளம் பேர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி இன்று (30-ம் தேதி) நடைபெற்றது.
பேரணியை நாகர்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர் லலித் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கி நகரின் முக்கிய சாலைகள் வழியாக கோட்டார் சந்திப்பை சென்றடைந்தது. மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்கள் இதய நோய்கள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கியபதாகைகளை கைகளில் ஏந்தியவண்ணம் சென்றனர்.
மருத்துவ கல்லூரி முதல்வர் மோகன் கூறும் போது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 40 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இதய நோய்கள் காணப்பட்ட நிலையில், தற்போதுள்ள துரித உணவுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவு பழக்கத்தால் இளம் சிறார்களுக்கு இதய நோய் தாக்கம் அதிக அளவில் காணப்படுவதாகவும், இதனை கருத்தில் கொண்டு இதயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் அதிக அளவில் இருப்பதாகவும் தெரிவித்தார்.