நாகர்கோவில் மாநகராட்சியில் தேவைகள் நிறைவேற்ற தீர்மானம்

55பார்த்தது
நாகர்கோவில் மாநகராட்சி இயல்பு மாமன்ற கூட்டம் இன்று (27-ம் தேதி) நடைபெற்றது. மேயர் ரெ. மகேஷ் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா இ. ஆ. ப முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தெருவிளக்குகள் அமைத்தல், குடிநீர் விநியோகம், குடிநீர் குழாய் உடைப்புகள் சரி செய்யவும், பழுதடைந்த சாலைகள் சீரமைக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் போன்ற அடிப்படை தேவைகளுக்கான கோரிக்கைகள் மாமன்றத்தில் கூறப்பட்டன.
அதற்கான நடவடிக்கைகள் உடனடி எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில்
துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டலத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் துறைச்சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :