கள்ளக்காதலனுடன் சென்ற பெண் தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்

57பார்த்தது
குழித்துறை அருகே உள்ள கழுவன் திட்டை பகுதியை சேர்ந்த சுனில் குமார் என்பவரது மனைவி பிரின்ஸி (33). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த அபினேஷ் ( 25 ) என்ற வாலிபருடன் ஏற்பட்ட கள்ள காதலால், அந்த வாலிபருடன்  பிரின்சி   சென்று விட்டார்.  
      இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி பிரின்சி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். அவரை குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.   நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
       இதற்கிடையே நேற்று (26-ம் தேதி)  மாலை பிரேத பரிசோதனை முடித்து  ஆம்புலன்ஸ் மூலம் பிரின்சி உடல் கொண்டு வரப்பட்டது.   அப்போது கணவர் மற்றும் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பிரின்சி மரணத்திற்கு கள்ளக்காதலன் தான் காரணம் எனவும்,   அவரை கைது செய்ய வேண்டும், பிரின்சி உடலை கள்ளக்காதலன் வீட்டில் அடக்கம் செய்ய வேண்டும் என  வலியுறுத்தி சாலை மறியல் நடந்தது.  
     இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அடுத்து தக்கலை டிஎஸ்பி  பார்த்திபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தியும்  மறியல் நீடித்தது. போராட்டம் முடிவுக்கு வராததால் பிரின்சி பிணத்தை குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று அங்கு வைக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி