பத்மநாபபுரம் - Padmanabhapuram

மார்த்தாண்டம்: வக்கீலிடம் 7 லட்சம் பறிப்பு; 2 பேர் மீது வழக்கு

மார்த்தாண்டம்: வக்கீலிடம் 7 லட்சம் பறிப்பு; 2 பேர் மீது வழக்கு

மார்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு பகுதியை சேர்ந்தவர் பென்னட்ராஜ் (45) இவர் வக்கீலாக உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் (52), பம்மம் பகுதியை சேர்ந்த சுதீர் ஜாக்கப் (52) ஆகியோருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தையில் முதலீடு செய்தல் அதிக லாபம் கிடைக்கும் என்று பென்னட்ராஜிடம் விஜயகுமார், சுதிர் ஜேக்கப் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்கள்.       இதனை நம்பிய பெனட் ராஜ் ரூபாய் 7 லட்சத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்காக விஜயகுமார், சுதீர் கொடுத்ததாக கூறப்படுகிறது ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்டு ரெண்டு பேரும் எந்தவித முதலீடு செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனை அறிந்த பெனட்ராஜ் உடனே மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.   புகாரின் பேரில் விஜயகுமார், சுதிர்ஜேக்கப் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా