அருமனை:   கோழி கூண்டில் புகுந்த நல்ல பாம்பு சிக்கியது

56பார்த்தது
அருமனை அருகே மாறப்பாடி பகுதி சேர்ந்தவர் தங்கராஜ். இவரது வீட்டில் சுமார் 20 கோழிகளுக்கு மேல் வளர்க்கப்படுகிறது. நேற்று திடீரென்று கோழி கூண்டில் இருந்து வித்தியாசமாக சத்தம் கேட்டது. இதையடுத்து தங்கராஜன் மருமகள் பெபியா என்பவர் சென்று பார்த்துள்ளார். அப்போது சுமார் 6 அடி நீளம் உள்ள நாகப்பாம்பு சீறி கொண்டு இருந்தது.

       உடனடியாக குலசேகரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த தீயணைப்பு படையினர் கோழிக் கூட்டை திறந்து பார்க்கும் போது ஒரு கோழி இறந்த நிலையில் பாம்பு சிறியபடி இருந்தது. பின் தீயணைப்பு படையினர் பாம்பை பிடித்தனர்.

      இது கொடிய விஷத்தன்மை உடைய பாம்பு என்றும் அதிக கோழிகள் பண்ணையில் தான் வளர்க்க வேண்டும், வீட்டில் வளர்க்கும் போது மிக பாதுகாப்பாகவும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் மிக அவசியம் என்ன தீயணைப்பு துறையினர் கூறினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி