புரட்டாசி 2 வது சனி ; பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

71பார்த்தது
புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெரும்பாலானோர் விரதம் இருந்து பெருமாளை வணங்கி வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் புரட்டாசி மாதங்களில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்தநிலையில் புரட்டாசி 2 வ து சனிக்கிழமையை யொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று விசேஷ பூஜைகளும் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குறிப்பாக நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள இடர்தீர்த்த பெருமாள்கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு நிர்மால்ய பூஜையும், 9 மணி உற்சவ மூர்த்திக்கு அபிஷேகமும் தீபாராதனையும் மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.

மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பெருமாள் கோவில்களான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன், பறக்கை மதுசூதன பெருமாள், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன், ஆஸ்ராமம் திருவேங்கட விண்ணகப்பெருமாள். உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடு மட்டும் சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி