கன்னியாகுமரி மாவட்டத்தில் மன்னராட்சி காலத்தில் தூக்கு தண்டனை வழங்கும் போது தூக்கு தண்டனையை நிறைவேற்ற பணியாற்றும் பணியாளர்களுக்கு மன்னரால் வழங்கப்பட்ட இடம் தான் ஆரச்சார் நிலம் எனப்படுகிறது. இந்த நிலம் 52 ஏக்கர் நாகர்கோவில் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை மன்னர்கள் காலத்திற்கு பின்னர் இந்த இடம் சம்பந்தபட்ட மாநில அரசுகளின் கட்டுபாட்டில் இருந்து வந்தது.
நாகர்கோவில் உள்ள இந்த ஆரச்சார் நிலங்களை அதிகாரிகள் உதவியுடன் தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். தற்போது அந்த நிலங்களை தனி நபர்கள் வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர்.
அதை தடுத்து நிலத்தை மீட்டு வீடு இல்லாத ஏழைகளுக்கு வழங்கவேண்டும் என கேட்டும், தனி நபர்களிடம் இருந்து நிலத்தை மீட்காத தமிழக அரசை கண்டித்தும், நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்து தமிழர் கட்சி சார்பில் இன்று (செப் 23-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத்தலைவர் ராஜன் தலைமையில் இந்து தமிழர் கட்சியினர் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டகாரர்களை போலீசார் கைது செய்தனர்.