
பத்துகாணி: வழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்
பத்துகாணி பகுதியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. கற்றுவா சந்திப்பு பகுதியில் வந்த போது திடீரென பிரேக் பழுது ஏற்பட்டது. டிரைவர் பஸ்ஸை நிறுத்த முயன்றும், அந்த சாலை மிகவும் செங்குத்து பகுதி என்பதால் மிகவும் சிரமப்பட்டு சாமர்த்தியமாக நிறுத்தினார். இதனால் பஸ்ஸில் பயணித்தவர்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால் அந்த சாலை மிகவும் குறுகலானது என்பதால் எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல முடிந்தது. மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு மாணவர்களை அழைத்துச் சென்ற பள்ளி வாகனங்களும் வரிசை கட்டி நின்றன. இதை எடுத்து அருகில் உள்ள மெக்கானிக் வரவழைக்கப்பட்டு அந்த பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தினர். சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது. இதையடுத்து மார்த்தாண்டம் பணிமனையில் இருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பஸ்ஸில் இருந்த பழுது நீக்கப்பட்டு இரவில் மீண்டும் பணிமனைக்கு பஸ் கொண்டு செல்லப்பட்டது.