குமரி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று (6-ம் தேதி) குமரி மேற்கு மாவட்ட பகுதி மற்றும் மலையோ கிராம பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை விடிய விடிய பெய்து வருகிறது.
இன்று (7-ம் தேதி) காலையிலும் இந்த மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. சுமார் பத்து நாட்களுக்கு பிறகு இன்று மாவட்டத்தில் பள்ளிகள் அனைத்தும் திறந்த நிலையில், காலையில் மழை காரணமாக மாணவ மாணவிகள் அவதிப்பட்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை இருள் காரணமாக இன்று காலையில் வாகனங்களில் செல்வோர் வாகன முகப்பு லைட் வெளிச்சத்தில் செல்லும் நிலை ஏற்பட்டது.
மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மற்றும் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.