கன்னியாகுமரி மாவட்ட உறுப்பினர் சேர்கை ஆய்வு கூட்டம் தக்கலை லக்ஷ்மி தனியார் மண்டபத்தில் வைத்து மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் நேற்று ( 4-ம் தேதி) நடைபெற்றது. இந்த நிகழ்சியில் பாஜக விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி , நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர் காந்தி , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி , மகளிர் அணி மாநில தலைவர் உமாரதி, உட்பட ஏறாளமான கிளை பொறுப்பாளர்கள் முதல் மாநில நிர்வாகிகள் வரை கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில ஒருகிணைப்பாளர் H. ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது தொண்டர்கள் ஒவ்வொருவரும் உறுப்பினர் சேர்க்கையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும், தமிழகத்தில் குமரி மாவட்டத்தை உறுப்பினர் சேர்க்கையில் முதன்மையாக மாற்ற வேண்டும் என பேசினார். இந்த நிகழ்வில் ஏறாளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.