குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவியும் ஒன்று. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பருவ மழை பெய்து வருவதால் குமரி மாவட்டத்தில் முக்கிய அணையான பேச்சிப்பாறை அணையிலும், பெருஞ்சாணியிலும் தண்ணீர் நீர்மட்டம் உயர்ந்தது.
இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து கோதை ஆற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணமாக திற்பரப்பு அருகில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் கடந்த 16, 17, 18 ஆகிய மூன்று நாட்கள் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தற்போது மழை சற்று நின்றுள்ளதால் நேற்று மாலை முதல் திற்பரப்பு அருவியில் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டது. இன்று (20-ம் தேதி) விடுமுறை காரணமாக காலை முதலே திற்பரப்பு அருவியில் ல் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.