தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு, அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விக்கிரவாண்டியில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு இடையூறும் ஏற்படாமல் தமிழக அரசு பார்த்துக்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள பாஜக, புதிய அரசியல் பாதையை உருவாக்கி, முன்மாதிரி கட்சியாக TVK விளங்க வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளது.