கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம் திட்டுவிளையை அடுத்த மார்த்தால் பகுதியில் உள்ளது.
இயற்கையின் பாதுகாவலர் என உலக கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களால் போற்றப்படும் இத்தாலி நாட்டின் அசிசி நகரைச் சார்ந்த புனித பிரான்சிஸ் அசிசியாரை பாதுகாவலராக கொண்ட
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.. அந்த வகையில் இந்த ஆண்டு 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.
விழாவின் முதல் நாளான இன்று (28-ம் தேதி) காலை கொடியேற்றமானது கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித பிரான்சிஸ் அசிசியாரின் ஆசீர் பெற்று சென்றனர்.
மேலும் விழாவில் தினமும் சிறப்பு ஆடம்பர கூட்டு திருப்பலி மற்றும் ஒன்பது மற்றும் பத்து ஆகிய திருவிழா நாட்களில் சிறப்பு தேர்பவனியும் நடைபெற உள்ளது.