தக்கலை: 5 மாதமாக உயிருக்கு போராடிய தொழிலாளி சாவு
தக்கலை அருகே முகமாத்தூர் என்ற இடத்தை சேர்ந்தவர் ரசல் ராஜ் (58). கேரளா மாநிலம் கோட்டயத்தில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த 11-6 - 2024 அன்று நடந்த சென்று கொண்டிருந்த போது அவர் மீது ஆட்டோ மோதியது இதில் தலையில் அடிபட்டதில் ரசல்ராஜ் படுகாயமடைந்தார். அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் கடந்த 8- 7 - 2024 அன்று அங்கிருந்து குமரி மாவட்டம் நாகர்கோயில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கோமா நிலையில் இருந்ததால் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ரசல் ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.