குமரி: பேச்சிப்பாறை அணையில் உபரி நீர் திறப்பு - எச்சரிக்கை

82பார்த்தது
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை இன்று 15ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில்  வங்க கடலில் நேற்று காலையில் புதிய புயல் சின்னம் உருவானது. இதனால் குமரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

      இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43. 75 அடியாகவும்,   557 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 552 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. இதுபோன்ற பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 64 அடியாக காணப்பட்டது.

       நேற்று மாலை 6 மணி அளவில் பேச்சிப்பாறை அணையிலிருந்து  வினாடிக்கு மேலும் 250 கன அடி நீர் மறுகல் வழியாக திறந்து விடப்பட்டது. பேச்சிபாறை அணையில் மறுகால் திறக்கப்பட்டதால் ஆற்றின் கரையோரமாக வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி