பைக் பறிமுதல் செய்ய வந்த பைனான்ஸ் ஊழியர் குளத்தில் குதிப்பு

69பார்த்தது
அருமனை மேலத்தெரு பகுதியில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகமது நஜிப் என்பவர் முடிதிருத்தும் தொழில் செய்து வருகிறார். இவர் ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்று பைக் ஒன்று வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனுக்கு தவணை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

      இந்த நிலையில் நேற்று (3-ம் தேதி) மாலை  பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ராபின் (27) உட்பட நான்கு பேர் வந்து பைக்கை பறிமுதல் செய்ய வந்துள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் அவர்கள் திருடர்கள் என கருதி பிடிக்க முயன்ற போது, அவர்கள் தப்பி ஓடவே, மிதின் என்பவர் அந்த பகுதியில் உள்ள குளத்தில் குதித்து விட்டார். ஆனால் அவர் வெளியே வர முடியவில்லை.  
      உடனடியாக சம்பவம் குறித்து அருமனை போலீசருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து குலசேகரம் தீயணைப்புத்துறையினர் குளத்தில் தத்தளித்து கொண்டிருந்தவரை இரவில் மீட்டுக் கரைக்கு கொண்டு வந்தனர். இதில் மிதின் மயக்கமடைந்தார்.   உடனே அவர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பொது மக்கள் போலீசார் நடத்திய விசாரணையில் குளத்தில் குதித்த மீதின் மீது பல வழக்குகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி