குளச்சல் - Kulachal

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி - ஜிகே வாசன்

நாகர்கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (18-ம் தேதி) நடைபெற்றது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜிகே வாசன் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர் அளித்த  பேட்டியில் கூறியதாவது: - பொய் வாக்குறுதிகளை வழங்கி திமுக அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. இந்தியாவிலேயே வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதல் அரசாக திமுக உள்ளது. மதுவை ஒழிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களை அழைத்துச் சென்று மது ஒழிப்பு மாநாடு நடத்துவது என்பது வேடிக்கையாகவும், புதிராகவும் உள்ளது. தமிழகத்தின் 60 ஆண்டு திராவிட ஆட்சியில், கூட்டணியில் இருந்த பிறகும் கூட  ஆட்சியில் கூட்டணி வேண்டும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என தற்போது அனைவரும் நினைக்கிறார்கள். கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக  மூடுவதற்கு இதுதான் சரியான தருணம். அரசு இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது. அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள் என கூறினார். இந்த பேட்டியின் போது குமரி மாவட்ட தமாக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా