திருவட்டாறு அருகே மண் எடுக்க பொதுமக்கள் மீண்டும் எதிர்ப்பு

85பார்த்தது
திருவட்டார் அருகே செறுகோல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக தனியார் நிறுவனம் ஒன்று பாறைகளை உடைத்து கற்கள், மண் ஆகியவற்றை கொண்டு சென்று வருகிறது. இதனால் அந்த பகுதி மலையை சுற்றி உள்ள கிராமங்களில் மண் சரிவு ஏற்பட்டது.  

இதையடுத்து மலையை உடைத்து மண் எதிர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரிகளை சிறை பிடித்து கடந்த நாட்களில் போராட்டம் நடத்தினர். அப்போது அதிகாரிகள் சம்பவ இடம் வந்து விசாரித்து மண் எடுப்பதை நிறுத்தினர்.  

இந்த நிலையில் நேற்று (ஆக.,26) மீண்டும் அந்த பகுதியில் மண் எடுப்பதற்காக பொக்லைன் இயந்திரம் கொண்டுவரப்பட்டது. இதை கண்டு அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் பொக்லைன் மற்றும் பாறை உடைக்க இயந்திரங்களை தடுத்து நிறுத்தி துடன் முற்றுகையிட்டு பாறை உடைக்க விடமாட்டோம் என்று கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதை அடுத்து மண்  எடுப்பதை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.  தொடர்ந்து அதிகாரிகள் முன்னிலையில் இன்று (27-ம் தேதி) பேச்சுவார்த்தை நடத்தி, அதன் பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி