நித்திரவிளை அருகே உள்ள கணபதியான் கடவு பாலம் பகுதியில் சாலை மிகவும் அகலம் குறைவாக காணப்படுகிறது. இதனால் காலை மற்றும் மாலை வேலைகளில் இரையுமன் துறை துறைமுக விரிவாக்க பணிகளுக்கு பாறாங்கல் கொண்டு செல்லும் நிறுவனம் அந்தப் பகுதியில் 3 செக்யூரிட்டிகளை நியமித்து உள்ளது.
இவர்கள் காலை, மாலை வேளைகளில் அந்த பகுதியில் போக்குவரத்தை சரி செய்து விடுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி காலையில் அந்த வழியாக சென்ற காஞ்சாம்புறம் பகுதியை சேர்ந்த குமரேசன். (44) என்பவர் ஓட்டி வந்த சொகுசு வாகனம் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த குமரேசன் அந்த பகுதியில் செக்யூரிட்டி பணியில் ஈடுபட்டிருந்த வேங்கோடு பகுதியைச் சேர்ந்த இயேசுமரியான் (62) என்பவரை தகாத வார்த்தைகள் பேசி தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த இயேசு மரியான் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமான புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் குமரேசன் மீது நேற்று (செப்.16) வழக்குப்பதிவு செய்தனர்.