மார்த்தாண்டம் அருகே நல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட முளங்குழி பகுதி உள்ளது. இந்த பகுதியில் தனி நபருக்கு சொந்தமான ஒரு இடத்தில் செல்போன் டவர் அமைக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த செல்போன் டவரால் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனவும் அந்த இடத்தில் செல்போன் டவர் அமைக்க கூடாது எனவும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட கலெக்டர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவு துறைக்கு மனு அளித்தனர். இருப்பினும் அந்தப் பகுதியில் மீண்டும் செல்போன் டவர் அமைக்கும் பணி தொடங்கியதாக
இதற்கிடையில் மார்த்தாண்டம் போலீசார் இரண்டு பேரை பிடித்து விசாரணைக்கு கொண்டு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து இன்று மதியம் அந்தப் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் செல்போன் டவர் அமைக்க கூடாது என்ற கோரிக்கையுடன் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். இதை அடுத்து போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் கூறி அனுப்பி வைத்தனர்.