துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நாதக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாதகவில் இருந்து சுமார் 3000 நிர்வாகிகள் விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிலையில், நாதகவில் இருந்து விலகிய அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் 12 பேர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், தங்களை திமுகவில் இணைந்து கொண்டனர்.