மார்த்தாண்டம்: வீடு, கோயிலுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

58பார்த்தது
மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதி மணியன்காட்டுவிளை என்ற இடத்தைச் சேர்ந்தவர் லில்லி. இவருக்குத் திருமணம் ஆகிவிட்டது. தலித் தம்பதியரான இவர்கள் தலைமுறை தலைமுறையாக அதே பகுதியில் உள்ள 6.5 செந்ட் நிலத்தில் வசித்து வருகிறார்கள். இவரது வீட்டிற்குப் பின்புறம் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் லில்லி வீட்டின் பின்புறத்தில் உள்ள நிலம் வைத்துள்ள ஒருவர், லில்லி புறம்போக்கு நிலத்தில் வசிப்பதற்குக் குற்றச்சாட்டு முன்வைத்து பலமுறை பிரச்சினையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் லில்லி தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த மர்ம நபர்கள் அவரது வீட்டுக்கு தீ வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். மேலும் அவரது வீட்டின் முன்புறம் வீட்டுடன் சேர்ந்த கோவிலுக்கும் தீ வைத்துச் சென்றுள்ளனர். 

இதைப் பொதுமக்கள் உடனே கவனித்ததால் தீ பரவும் முன்பாகவே அணைக்கப்பட்டது. இதனால் லில்லியும் மயிரிழையில் உயிர் தப்பினர். இதுகுறித்து லில்லி மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி