குலசேகரம்: மாயமான விமானப்படை ஊழியர்.. கால்வாயில் தேடல்

69பார்த்தது
குலசேகரம் அருகே உள்ள மங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் நாயர். விமானப்படையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தற்போது வக்கீலாக பணியாற்றி வந்தார். சொந்தமாக விவசாயமும் செய்து வந்தார். கடந்த 15ஆம் தேதி தோட்டத்திற்கு சென்ற ராமச்சந்திரன் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மகன் ராகேஷ் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் தேடி வந்தனர். 

இதற்கிடையில் அவரது தோட்டம் பட்டணம் கால்வாய் செல்லும் பகுதியில் அமைந்துள்ளதால் ராமச்சந்திரன் கால் தவறி கால்வாயில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதன் பேரில் குலசேகரம் தீயணைப்பு படையை சேர்ந்த வீரர்கள் 2 நாட்களாக மங்கலம், புத்தன் சந்தை அணை ஆகிய பகுதிகளில் தீவிரமாக அவரை தேடினார்கள். அணையில் தண்ணீரை நிறுத்திவிட்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ராமச்சந்திரன் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இருப்பினும் இன்று 18-ம் தேதி 3-ம் நாளாக தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி