குளச்சல் அருகே குறும்பனை தோமையார் தெருவைச் சேர்ந்தவர் அஸ்வின் நிரேஷ் (23). அதே பகுதி அந்தோனியார் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி இரவு அஸ்வின் நிரேஷ் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விக்னேஷ், அபிஷேக் என்ற சஞ்சய், ரிஜோ, சஜின், நிரேஷ் உட்பட ஏழு பேர் தகாத வார்த்தைகள் பேசி அஸ்வின் நிரேஷிடம் தகராறு செய்துள்ளனர்.
மேலும் ஆத்திரமடைந்தவர்கள் அஸ்வின் நிரேஷை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர். இதில் காயமடைந்தவர் குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் விக்னேஷ் உள்ளிட்ட ஏழு பேர் மீது நேற்று (பிப்ரவரி 08) வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.