தேங்காய்பட்டணம்: மீன்பிடி துறைமுக பணி; அலுவலர் ஆய்வு

67பார்த்தது
தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுக விரிவாக்கப் பணிகள் ஆய்வு இன்று நடைபெற்றது. கலெக்டர் அழகு மீனா தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா நேரில் ஆய்வு மேற்கொண்டு, பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். துறைமுக விரிவாக்கப் பணிகளானது மூன்று கட்டங்களாக நடைபெற்று வருவது குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. 

மூன்று கட்டப்பணிகளில் ஒன்றான உள்கட்டமைப்பு மேம்படுத்தும் பணியில் உள்ள நீதிமன்ற வழக்கினை விரைந்து முடித்து மீனவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது. மேலும் இரண்டாம் கட்டப்பணியினை இவ்வாண்டு மார்ச் மாதத்திலும் மூன்றாம் கட்டப்பணியினை இவ்வாண்டு இறுதிக்குள்ளும் முடித்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, தேங்காய்பட்டிணம் மீன்வளத்துறை உதவி இயக்குநர், தேங்காய்பட்டிணம் மீன்பிடித் துறைமுக உதவி செயற்பொறியாளர் அரவிந்த் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி